
விதியுடன் பிணைந்த மானுட இருப்பின் அவலத்தை உக்கிரமாகச் சித்தரிக்கும் மார்க்கேஸின் சிறந்த குறுநாவல் இது. தன் மனைவி கன்னிப் பெண்ணல்ல என்று அவளைத் திருப்பி அனுப்பும் கணவன், போகிறபோக்கில் சந்தியாகோ நாஸாரின் பெயரை உதிர்க்கும் ஆங்கெலா, இழந்த கௌரவத்தை மீட்கப் புறப்படும் இரட்டைச் சகோதரர்கள், இவர்களில் பலியாகப் போவது யார்? இது கொலையைத் துப்பறியும் புனைவல்ல. மௌனத்தின் வழியே உடன்-கொலையாளியாக மாறும் சமூகத்தின் கூட்டு மனசாட்சியைத் துப்பறியும் விசாரணை. கலாச்சாரம் என்னும் பாவனை, அதிகாரத்தின் கணப்பொழுது மெத்தனம் என அனைத்தும் சேர்ந்து மனிதனை பலிபீடத்தில் கொண்டு நிறுத்துவதை இந்நாவல் விவரிக்கிறது. லத்தீன் அமெரிக்கக் கிராமங்களில் நிலவிய ஆணாதிக்க ஒழுக்கப் பார்வையையும், விதியின் தப்ப முடியாத சுழல்வழியையும் இதழியல் துல்லியத்தோடு ஆவணப்படுத்துகிறது மார்க்கேஸின் இந்த ஆக்கம்.
| Brand Name | Kalachuvadu Pathipagam |
| Manufacturer | Kalachuvadu Pathipagam |
| Item Type | Classic Fiction · Books |
| Shipping Weight | 150 g |
| Package Dimensions | 22.8 × 15.1 × 1.5 cm |
| Category | Books › Literature & Fiction › Classic Fiction |
| Category Rank | #529,163 in Books |
| Marketplace Rating | 4.5 out of 5 (12 ratings on the source marketplace) |
| EAN | 9789352440474 |